காட்டு பயல்
பள்ளிக்கூடம் போகல பாடம் யாரும் நடத்தல
காட்டு மெட்டு பயலுகன்னு எங்கள யாரும் மதிக்கல
ஒத்த ரூவா துட்டுகூட ஒரு நாளில பாக்கள
ஒன்னாவது கூட முழுசாக போகல
கண் கலங்கி நின்னாலும் கைய்குடுக்க ஆள் இல்ல
காட்டு பயலுகன்னு பேரா தவிர வேற ஏதும் இல்ல
கூவும் குயில் எங்களோட கூட்டாளி
எங்க வர்க்கம் என்னக்குமே முன்னேறாத பாட்டாளி
சத்தம் போட்டு கத்தினாலும் கேட்காது
எங்கள உயிரோட தான் இருக்கிங்கிங்கலானு அரசு கூட கேட்காது