மற்றுநான்ஓர் நல்லதேவ தை - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

வானிலி ருந்துதரை யில்வீழ்ந்த தேவதைநான்;
நானிலத்தில் நம்பிக்கை யும்,கனவும் – நானே
இழந்து தரையிலே வீழ்ந்ததேவ தைநான்
உழன்றஞ்ச வேண்டாம் உணர்! 1

வருத்தமே கொண்டவோர் தேவதை நானே!
உருக்கொண்டிங் கேவந்த தேன்இன் – னொருமுறை!
காரணமாய்த் தான்என் சிறகொடித்து மானிடராய்ப்
பேரெடுத்த தேவதை நான்! 2

தரையில் விழுந்தவோர் தேவதைநான் என்றே
உரைப்பேன்; மறுமுறை தந்த – புரையில்
தடத்திலே முன்செய்த தப்புகள்செய் யாது
நடப்பேனே நல்வழி தேர்ந்து! 3

முன்செய்த தப்புகள்செய் யாது நடப்பேனே!
இன்னுமோர் நல்வழி தேர்ந்துநான் – மன்னிப்பைப்
பெற்றுய்ய செய்வேன் பொறுமையுடன் தக்கபடி
மற்றுநான்ஓர் நல்லதேவ தை! 4

Ref: Fallen Angel – Poem by Poet Jennife Rondeau

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Sep-15, 12:42 pm)
பார்வை : 70

மேலே