காதலி அழகு
அலைகள் போல அமுத பெண்ணே
உன்னை அள்ளி வர எத்தனை மலரோ
கொலுசும் கூட மலரினும் பெரிதோ
அது உன் காலை தொட்டது ஏனோ
அள்ளி மலரே அன்பே உன் செம்முகம்
ஆயிரம் சூரியன் பூத்த ஒரு முகம்
உன் மடியும் கிடைத்தால் உலகையும் மறப்பேன்
உன்னுடன் இருந்தால் உலகையும் ஜெயிப்பேன்
என்றும் நீயே எந்தன் நினைவில்
என்னையும் சேர்ப்பாய் உந்தன் நினைவில்
அரை நொடி பொழுதும் உன்னை பிரிந்தால்
அடங்க நினைக்கும் எந்தன் உடலும்
கனவும் நீயே கலையா கனவே
கடலினும் பெரிதே எந்தன் நினைவே...........
சேர வேண்டும் நானும் உனையே
சேர்ந்தேன் அதனால் என் மறு ஜென்ம தாயே..........

