பாடுபாடு
1.குழந்தைகளிடம்
முதல் ஆட்டோகிராஃப்
வாங்குவது
வீட்டுச் சுவர்கள் தான்.!!
2.நாட்டில் தினமும் அனாதை குழந்தைகள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
நம்மில் "ஒளிந்துள்ள"
அன்னை தெரசாவை
தான் "கொன்றுவிட்டோம்"
3.நம் பெற்றோர்களை அவர்கள் வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அவர்கள் இல்லாதகாலத்தில் அவர்களுக்காக என்று நாம் என்ன செய்தாலும் ஈடாகாது.
4.ஏழைக்கு வந்தால் சொறி சிரங்கு!
பணக்காரனுக்கு வந்தால் ஸ்கின் இன்ஃபக்ஷன்!
5.கிழிந்து தைத்த உடை அணிந்து வரும் பெற்றோரை பார்த்து வெட்கப் படாதீர்கள்!இந்த நிலையிலும் உங்களை பட்டம் பெற வைத்தார்கள் என்று பெருமைப்படுங்கள்!
6.பணம் சம்பாதிக்க ஆயிரம் தொழில் இருக்கு.. உணவைச் சம்பாதிக்க விவசாயம் மட்டும்தானே இருக்கு!