நட்பாய் மட்டும் ஒரு நட்பு
திசை அறியாத
வாழ்க்கை பயணத்தில்
தொலைநோக்கியாய்
நீ கிடைத்தாய்,
திசைகள் பல
அறிய செய்தாய்
என்
வாழ்க்கை பயணம்
புரிய செய்தாய்,
ஞாயிற்று கிழமையில்
உன் உணவிற்காக
ஏங்கி கிடந்தன
என் நா,
உன் வருகைக்காக
காத்து கிடந்தது
என் கண்கள்,
கதைகள் பல பேசி
கைகலப்பு பலமுறை
நடத்தி விஞ்ஞானமும்
மெய் ஞானமும்
விளங்க வைத்தாய்,
ஊமையின் பாசைதனை
கண்ணால் கற்று தந்தாய்
கண்ணோடு கண்பேசி
இது காதல் இல்லை
என உணரவைத்தாய்,
உனக்கும்
எனக்கும்
ஏனோ அந்த
மூன்றெழுத்து மூர்க்கம்
மட்டும் எட்டி
பார்க்கவேயில்லை,
இரத்த பாசமும் இல்லை
பெத்த பாசமும் இல்லை
ஆனால் ஏனோ
என்னோடு எப்போதும்
பாச பரிவர்த்தனை
வைத்து கொண்டாய்,
என்னோடு சிரித்தாய்
எனக்குள்ளும் சிரித்தாய்
என்னோடு அழுதாய்
எனக்குள்ளும் அழுதாய்,
கால நதி தன்
கரை தொட்டபோது
நாம் மூன்றாண்டு
கடந்து இருந்தோம்
ஆனால்
முவாயிரம் ஆண்டுக்கும்
பழகி இருந்தோம்,
வாழ்க்கையின் பிடி
தேடி நீ நடந்தாய்
வாழ்க்கையே பிடியாகி
நான் நடந்தேன்
அன்றும்
இன்றும்
என்று
நட்ப்பாய்....
நட்ப்பாய்....
நட்ப்பாய்....