அன்பு

ஏன் அம்பறாத்தூணியை
அம்புகளால் நிறைக்கிறாய்?
என்னை வீழ்த்த ஒற்றை
அம்பு போதுமே....
கோபக்கணை கொண்டு
என்றும் வீழ்த்த முடியாது...
பார்வைக்கணையாலே
எரிக்கவும் முடியாது...
சொல்லின் கணையாலே
என்ன செய்யமுடியும்...
எல்லாக் கணைகளையும்
வீசி எறிந்துவிடு...
அன்பை எடுத்துக்கொள்..
இந்த ஒற்றைக்கணை போதும்...
என்னை மட்டுமா?
இந்த உலகையே வீழ்த்தலாம்..

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (23-Sep-15, 12:39 pm)
சேர்த்தது : நீ சங்கர்
Tanglish : anbu
பார்வை : 94

மேலே