நீ சங்கர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நீ சங்கர்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  03-Apr-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2012
பார்த்தவர்கள்:  376
புள்ளி:  67

என்னைப் பற்றி...

தமிழை நேசிப்பவன். எளிமையை விரும்புபவன். அன்பாய் இருப்பவன். படிப்பதில் ஆர்வம் கவிதை வடிப்பதில் இன்பம். நண்பருடன் இணைந்து கைக்கொடுப்போம் அறக்கட்டளை தொடங்கி முதியோர் இல்லம் மற்றும் சமூகப்பணி செய்து வருகிறேன். போகும் வழியெல்லாம் அன்பை விதைப்போம்....எவரேனும் என்றேனும் அறுவடை செய்யட்டும்

என் படைப்புகள்
நீ சங்கர் செய்திகள்
நீ சங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2022 10:44 pm

அந்த பூந்தோட்டத்தில்
எந்த பூ எப்போது மலர்த்து
யாருக்குத் தெரியும்?
அன்பில் பூத்த
நம் பாசப்பூவும்
மலர்த்த நொடி தெரியாத
அதிசயம் தானே...!

எங்கு பிறந்தாலென்ன
எங்கு வளர்ந்தாலென்ன
அன்பின் வேர்க்கால்கள்
மண்ணில் பிணைத்தது
அண்ணன் தங்கை என்னும்
அழகான பந்தத்தில்...

என் அன்பில்
அடங்கிப்போன
பேரன்பின் காட்டாறு நீ...

கோப்பெருஞ்சோழனோ
பிசிராந்தையாரோ நாமல்ல...
சந்தித்தில்லை
ஆனாலும்
அறிவியல்
நம்மை பார்க்க வைத்தது
பேச வைத்தது
அன்பில் சங்கமிக்க வைத்தது...

என் பாசத்தின் நீட்சி நீ
அன்பின் மீட்சி நீ
கோபத்தில் வெளிப்படும்
உண்மையான அன்பின்
பானுமீனாள் நீ...

மேலும்

நீ சங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2018 11:15 pm

காவியங்கள் புகழ்ந்தன...
கவிஞர்கள் புகழ்ந்தார்கள்..
மேவிய ஆறுகள் பல ஓட
மேனி செழிந்த நாடு என்று
புகழப்பட்டடும் இந்த மண் தான்..
இன்றோ உயிர் தொலைக்கும் நிலையில்
மூச்சுமுட்ட நிற்கிறது....
பேராசைகள் மனிதனை ஆண்டு
அவன் கைகள் மண்ணை சுரண்ட
கிழவியின் வற்றிப்போன தனங்களாய்
ஊற்றுகளின்றி நீரற்ற பாலைவனமாய்..
இயற்கையின் கண்ணீர் வரிகள் தான்
சில நேரங்களில் ஊசலாடும் உயிரை காக்கிறது..
வரிவரியாய் எம்மண்ணின் மேனியெங்கும்
ஓடும் இந்த ஆறுகள் எங்களின்
வறுமைக்கு விடுதலை தரவில்லை..
கொள்ளிக்கண்களோ எங்கே எப்படி மடக்கி
கொள்ளையிடலாம் என்று கணக்கு போடுகிறது..
நாகரிகத்தொட்டில்கள் இன்றைக்கு
அள்ளித்தாலாட்

மேலும்

நீ சங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jan-2018 2:37 pm

காலம் விட்டுச்சென்ற எச்சமென
நவீன உலகின் நாகரீக மக்கள்
ஒதுக்கி வைத்த உலகத்தின் வேர்

குற்றமில்லா வெள்ளை உள்ளத்தை
வெளியில் அழுக்கெனவே ஒதுக்கும்
வெள்ளை ஆடை கருப்பு மனங்கள்..

எண்ணமெல்லாம் நல்லது கொண்டு
ஏற்றம் காணா வாழ்க்கையிலும்
சுற்றத்து மக்களின் வயிறு நிறைக்க
அயராது உழைக்கும் கரங்கள்

புரட்சி என்று சொல்லி நச்சு கொட்டி
மலடாக்கி வைக்கப்பட்ட மண்ணில்
உழவனை திண்டாட வைத்த உலகம்...

துரத்தி துரத்தி அடிக்கும் வறுமை..
விரட்டி விரட்டி வரும் வறண்ட வானம்..
புரட்டி புரட்டி போட்டு மிதிக்கும் அரசு

உழைப்பால் மண்ணை பொன்னாக்கும்
நிலை கொன்று
மண்ணை விற்று பொன்னாக்கும்
கண்ணீர் அவலத்தில்

மேலும்

நீ சங்கர் - நீ சங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2015 9:33 pm

கண்கள் பார்க்க
காதல் பிறந்தது
நெஞ்சம் இனிக்க
நாளும் நகர்ந்தது
சொல்லாத வார்த்தைகள்
காதில் ஒலித்தது
சொர்க்க பூமியாய்
காட்சி விரிந்தது ..
சொல்லென்று ஒரு
மனதும்
பொறுவென்று ஒரு
மனதும்..
சொல்லாமலே ஓடியது
காலமும்..
இன்று நீயொரு ஊரில்
உன் குடும்பத்தோடு
நானொரு ஊரில்
என் குடுப்ம்பத்தோடு
இந்த நாளும் மகிழ்ச்சியாய்
தான் இருக்கிறது..
இது காதலின் தோல்வியல்ல..
நம்மின் காதல்தோல்வி மட்டுமே..

-சங்கர் நீதிமாணிக்கம்

மேலும்

நன்றி நண்பரே 09-Nov-2015 7:13 pm
இறுதி இரு வரிகள் உண்மை 09-Nov-2015 4:55 pm
நீ சங்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Nov-2015 9:41 pm

பாசங்கள் கோடி நம்மை
சுற்றி இருந்தாலும்
வேஷங்கள் கொண்ட உலகம்
நம்மை வதைக்கக்கூடும்

சோதனைகள் சூழ்த்து வரும்
வேதனைகள் வேக வைக்கும்
சொல்லீட்டி அம்புகளோ
சூழ்த்து நம்மை கொல்லவரும்..

துரோகமும் நிழல்போல
நம்முடனே நாளும் வரும்
சொல்லன்னா துயரங்களும்
சொல்லாமல் வந்துநிற்கும்

ஏமாற்றம் எதிரே வர
இல்லாமை இறுக வைக்க
தள்ளாமை நடையில் வரும்
தளர்ந்தே நம்மை போகச்செய்யும்

எல்லாவற்றையும் நம்மேல் போட்டு
புதைத்துக்கொண்டு
அழுத்தங்கொண்டு
வெப்பங்கொண்டு...

கனிந்துவரும் நாளுக்காய்
மூச்சடக்கி பேச்சடக்கி
மௌனமாய் காத்திருப்போம்

மனத்தின் திடத்தோடு
மாறாத புன்னைகையுடன்
பூமியின் மேலே நாம

மேலும்

நீ சங்கர் - நீ சங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2015 6:22 pm

நூலறுந்த மணியாக
வானிருந்து கொட்டும் நீர்த்துளி..
மழை...

மேலும்

நன்றி நண்பரே 05-Oct-2015 10:58 am
நல்ல கற்பனை... நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Oct-2015 8:43 pm
திருமூர்த்தி அளித்த எண்ணத்தை (public) விக்னேஷ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
01-Sep-2015 7:56 pm

என் நெஞ்சைக் கிழித்த பதிவு...


மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கே போய் சலவை செய்வது?
********************************************************************

மேலும்

கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் அய்யா... எண்ணத்தில் பகிர்ந்தேன்... அந்தப் படம் நான் முகநூலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தது... 24-Sep-2015 4:15 pm
இவை எவரின் வரிகள் ??? 02-Sep-2015 9:14 pm
ம்ம்ம்ம் 02-Sep-2015 6:31 pm
நன்றி..... 02-Sep-2015 6:31 pm
நீ சங்கர் - நீ சங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2015 12:48 pm

ஓடி ஓடி களைத்து விட்டோம்
பணம் தேடித்தேடி சோர்ந்து விட்டோம்
ஓட்டமும் நடையுமாய் வேலைக்கு ஓடி
அரைகுறையாய் பசிக்கு உண்டு
அல்லும் பகலும் சேர்ப்பது எதற்கு....

சொந்தங்களின் தொடர்பறுத்தோம்
சுற்றங்களின் சுகம் இழந்தோம்
எதிர்வாசல் இருப்போர் அறியாது
முகமறியா நட்பில் மூழ்கிவிட்டோம்

வேலையின் அலைகழிப்பில்
ஊர் அறுத்தோம்.....
பணத்தின் மோகத்திலே
உறவு அறுத்தோம்.....
எண்ணத்தின் குறுக்கத்தால்
சுற்றம் அறுத்தோம்...
உலகோடு வாழ்வோமென்று
சுயம் அறுத்தோம்....

எல்லாம் அறுத்தபின்பு
எதற்கு வாழ்வு..

மேலும்

தங்களின் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே ..... 15-Sep-2015 11:00 am
நன்று நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் 14-Sep-2015 2:05 pm
நீ சங்கர் - நீ சங்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2015 12:53 pm

வாசிப்பது என்பது
அடர்ந்த காட்டுக்குள் பிரயாணிப்பது போல
சுகமான அனுபவம்.
அங்கு இருக்கும் எல்லாமே அழகு.
பிறர் உருவாக்கிய பாதையில் செல்லாமல்
நீங்களே ஆழ்ந்து பிரயாணப்பட
உங்கள் ஆன்மாவை
அருகில் தரிசிக்க முடியும்


- கே. என்.சிவராமன்

மேலும்

உண்மை தான் நண்பரே... வசிப்பதில் நல்ல கருத்துக்களை பகிர்வதும் இன்பமே.. 15-Sep-2015 10:59 am
உண்மை தான் வாசிப்பு தான் ஒருவனை பூரன மனிதனாக்குகிறது 14-Sep-2015 2:04 pm
நீ சங்கர் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2015 6:56 pm

ஒரு சின்ன கற்பனை.

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400.ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும்.

ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -

1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் " உங்கள்கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்றமுடியாது.
3) அதை செலவு செய்யமட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக்கணக்கில் அந்த நாளின் செலவிற்காக. 86400. ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்

மேலும்

வீணாக்கப்படும் வாழ்க்கை நீங்கள் சொல்லிய விதம் அருமை, தாங்கள் படைப்புக்கு வாழ்த்துக்கள். 22-Oct-2015 5:44 pm
நல்ல உவமை.. நன்றி 12-Sep-2015 2:47 pm
நன்றி. எல்லோரும் நலம் ஆக முயற்சிப்போம். 12-Sep-2015 11:00 am
நன்றி. 12-Sep-2015 10:59 am
நீ சங்கர் - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2014 10:30 pm

அழகு ரோஜாக்களின்
ராணுவ அணிவகுப்பு...!

என்னவள் கூந்தலில்
சூடிட காத்திருப்பு...!

ரோஜாவும் தினம்
துதி பாடும்...!

அவள் காலடியில்
தினம் ஜதி போடும்...!

வரும் வழியெல்லாம்
பெரும் உபசரிப்பு...!

அவள் மேனியில் உரச
வீதியில் தென்றல் ஆர்ப்பரிப்பு...!

அவள் கவிதைகளால் செதுக்கிய
காதல் கலைவாணி...!

அவளை கரம் பிடித்தால்
இக்கவி இனி காதல் ஞானி...!

மேலும்

தொடர்ச்சியாக எனது படைப்புகளை வாசித்து ரசித்து ருசித்து கருத்துக்காளால் ஊக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி தோழரே....! 22-Nov-2014 9:22 pm
நல்லாருக்கு தோழ................ 22-Nov-2014 9:14 pm
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி....! 13-Oct-2014 10:11 pm
அடடா 13-Oct-2014 10:02 pm
நீ சங்கர் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Sep-2014 4:40 pm

தொலை பேசியில்
தொடர்பு கொண்டாய் முதன் முதலில்..
தவறாக அழைத்து விட்டேன்
என்று வருத்தப் பட்டாய்..

சேமித்துக் கொண்டேன்
உன் தொலை பேசி எண்ணை
என் கைப்பேசியில்..
உன் குரலை என் ஆழ் மனதில்..
கிளி ஒன்று கொஞ்சுவதை
கேட்ட பின்பு
கூக்குரலாய் தோன்றிடுதே
மற்றவை எல்லாம் !
உன் குரலை வைத்து
மனதுக்குள்..
ஓவியம் ஒன்று வரைந்து பார்த்தேன்
ஓ!
வியப்படைந்தேன் !..
உன் அழகை எண்ணி..!
மீண்டும் உந்தன்
அழைப்புக்காக
ஏங்கி நின்றேன்
நாள் கணக்காய்!
நேருக்கு நேர் உன்னை பார்க்க வேண்டி
தொடர்பு கொண்டேன் ..
மீண்டும்.. மீண்டும்..
எனத் தொடர்ந்த பேச்சு
காதலாய் மலர்ந்து போச்சு..
ஒரு தலைக்

மேலும்

நன்றி..நன்றி! 01-Oct-2014 10:39 am
தொடர்ந்து வரும் தங்களது ஊக்கம் தரும் கருத்துகளுக்கு நன்றிகள் பல! 01-Oct-2014 10:39 am
எளிய நடையில், அழகான வரிகளில் கவிதை காதல் பூக்களை வீசிச் செல்கிறது.... 01-Oct-2014 10:20 am
வரிகள் அருமை. உங்கள் காதல உறுதிப்பட என் வாழ்த்துக்கள்... 01-Oct-2014 9:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கன்னி தங்கமுருகன்

கன்னி தங்கமுருகன்

தேன்கனிக்கோட்டை
சொ பாஸ்கரன்

சொ பாஸ்கரன்

விளந்தை‍‍‍‍ ‍‍ஆண்டிமடம்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (18)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மேலே