உழவன்

காலம் விட்டுச்சென்ற எச்சமென
நவீன உலகின் நாகரீக மக்கள்
ஒதுக்கி வைத்த உலகத்தின் வேர்

குற்றமில்லா வெள்ளை உள்ளத்தை
வெளியில் அழுக்கெனவே ஒதுக்கும்
வெள்ளை ஆடை கருப்பு மனங்கள்..

எண்ணமெல்லாம் நல்லது கொண்டு
ஏற்றம் காணா வாழ்க்கையிலும்
சுற்றத்து மக்களின் வயிறு நிறைக்க
அயராது உழைக்கும் கரங்கள்

புரட்சி என்று சொல்லி நச்சு கொட்டி
மலடாக்கி வைக்கப்பட்ட மண்ணில்
உழவனை திண்டாட வைத்த உலகம்...

துரத்தி துரத்தி அடிக்கும் வறுமை..
விரட்டி விரட்டி வரும் வறண்ட வானம்..
புரட்டி புரட்டி போட்டு மிதிக்கும் அரசு

உழைப்பால் மண்ணை பொன்னாக்கும்
நிலை கொன்று
மண்ணை விற்று பொன்னாக்கும்
கண்ணீர் அவலத்தில் உழவன்..
யாருக்கு புரியும் அவர் இதயத்தின் வலி..?

பேதையாய் வாழ்கிறான் - மண்ணின்
போதையால் உழுகிறான்
பாதை ஒன்று சொல்லுவோம்
மரியாதை கொஞ்சம் தருவோம்

என்றும் உறங்காதது காலம்...
உறங்காது பயிர் செய்யும்
உழவன் காலத்தின் மறுஆக்கம்..

#சங்கர்_நீதிமாணிக்கம்

எழுதியவர் : சங்கர் நீதிமாணிக்கம் (11-Jan-18, 2:37 pm)
சேர்த்தது : நீ சங்கர்
Tanglish : uzhavan
பார்வை : 180

மேலே