ஊர்சென் றடைந்தபின்னே வாட்சப்பில் பேசுகிறேன்

இது whatsapp , twitter , facebook உலகம். wifi மூலம் இணைய தளத்தில் இணைந்து எப்போதும் மற்றவருடன் தொடர்பு கொண்டிருப்பதால், பலருக்கு எதிரே உட்கார்ந்திருப்பவரிடம் பேசக்கூட முடியாமல் போகிறது.

வீட்டுக்கு விருத்தினர் வந்தால் அவருக்கு காபி,டிபன் கொடுத்து உபசாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை - நம் வீட்டு wifi யுடன் connect செய்வதற்கான paasword -ஐ கொடுத்துவிட்டால் போதும். வந்தவர்கள் எல்லாம் கையிலுள்ள ஐ- பேட் , மொபைல் இத்யாதி கருவிகளை நோண்டிக்கொண்டு இருப்பார்கள். வந்த வேலையைப் பற்றிக் கூட பேச மறந்துவிடுவார்கள்.

உங்களில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், வியப்பெதுவும் இல்லை!

இந்த நிலைமை பற்றி ஒரு பாடல்.



வெகுநாட் களுக்குப்பின் மனைவியொடும் மகளோடும்
-----வீடுவந்த உறவினரை வருகவென வரவேற்று
முகமன்கள் பலகூறி முகமகிழ்ந்து அமரவைத்து
------சுற்றங்கள் பற்றிப்பல தகவல்பரி மாறுமுன்னே

விருப்பமுடன் அவருண்ண வகைவகையாய் இனிப்புகளும்
-----முருக்குடன் தட்டைஎன நொறுக்குத் தீனிகளும்
கருப்புக் காபியுடன் சுருங்கக் காய்ச்சிய பால்
-----விருந்துண்ணக் கொடுத்துப்பின் பேசத் தொடங்கையிலே

என்னுடைய இல்லத்தின் கம்பியில்லா மெய்நிலையின்*
-------கடவுச் சொல்லினையே** முதலாகக் கேட்டறிந்து
தன்னுடைய கைபேசி மனைவிமகன் ஐ-பேட்கள்
--------இன்னபிற கருவிகளை இணையத்தில் இணைத்திட்டார்

காசெதுவும் கேட்காத வாட்சப்பின் வாய்ஸ்காலில்
-----பேசத் தொடங்கியவர் பலமணிகள் பலருடனும்
பேசி முடித்தவுடன் மணிகாட்டியைப் பார்த்து
------ரயிலுக்கு லேட்டாச்சு எனக்கூறி மிகப் பதைத்து .

ஆறிய காபியையும் அவசரமாய்க் குடித்திட்டு
------வாரிச் சுருட்டுக்கொண்டு வாடகை வாகனத்தில்
ஏறிப் புறப்படுமுன் உரைத்தஒரு வார்த்தையிது -
---- ஊருக்குப் போனபின்னே வாட்சப்பில் பேசுகிறேன் !"


* கம்பியில்லா மெய்நிலை = WI-FI
** கடவுச் சொல் = PASS WORD

எழுதியவர் : கணித்தோட்டம் ரமேஷ் (11-Jan-18, 3:55 pm)
பார்வை : 62

மேலே