தள்ளி நின்றும் தடுத்துக்கொண்டும்
வறுமையில் பிறந்து விட்டோம்
விதி செய்த சதியென்று
பிஞ்சு மனம் கதறுதடா!
வண்ண உடை அணியோமோ?
ஒப்பனைகள் செய்யோமோ?
என்று வரும் அந்தச் சூழலென்று
ஏங்கி நிற்கும் குழந்தை மனம்!
யார் இதற்கு பொறுப்பு?
படைத்த கடவுளா?
ஈன்றெடுத்த பெற்றோரா?
உதறி விட்ட உறவுகளா?
காணாத அரசுகளா?
இல்லை வீணர்கள் சொல்லும் விதியா?
"இதில் தனி யாரும் இல்லை"
தன் மதமே வாழ வேண்டும்
தன் ஜாதியே முன்னேற வேண்டுமென்று
தள்ளி நின்றும்
தடுத்துக்கொண்டும்
தானும் முன்னேறாது
மற்றோரும் முன்னேற விடாது
கண்டும் காணாமல் அமைதியாய் இருக்கும்
சமுதாயமே இதற்குப் பொறுப்பு
ஏழை - பணக்காரன்
வறுமை - செழுமை
இடையில் இருப்பது சிறிய முரண்பாடே
புரிந்து கொண்டால் செய்து விடலாம்
இயன்றதைச் செய்வோம்
இயல்பாய்ச் செய்வோம்