உறுதி செய்

தொலை பேசியில்
தொடர்பு கொண்டாய் முதன் முதலில்..
தவறாக அழைத்து விட்டேன்
என்று வருத்தப் பட்டாய்..

சேமித்துக் கொண்டேன்
உன் தொலை பேசி எண்ணை
என் கைப்பேசியில்..
உன் குரலை என் ஆழ் மனதில்..
கிளி ஒன்று கொஞ்சுவதை
கேட்ட பின்பு
கூக்குரலாய் தோன்றிடுதே
மற்றவை எல்லாம் !
உன் குரலை வைத்து
மனதுக்குள்..
ஓவியம் ஒன்று வரைந்து பார்த்தேன்
ஓ!
வியப்படைந்தேன் !..
உன் அழகை எண்ணி..!
மீண்டும் உந்தன்
அழைப்புக்காக
ஏங்கி நின்றேன்
நாள் கணக்காய்!
நேருக்கு நேர் உன்னை பார்க்க வேண்டி
தொடர்பு கொண்டேன் ..
மீண்டும்.. மீண்டும்..
எனத் தொடர்ந்த பேச்சு
காதலாய் மலர்ந்து போச்சு..
ஒரு தலைக்
காதலாய் மலர்ந்து போச்சு..!
இனி நீ இல்லையேல்..
அத்தனையும் போச்சு..!
இக்கவிதை கடிதத்தை
கண்டவுடன்
நம் சந்திப்பை உறுதி செய்!
பின் காதலையும்
உறுதி செய்வோம்!

எழுதியவர் : karuna (30-Sep-14, 4:40 pm)
Tanglish : uruthi sei
பார்வை : 88

மேலே