தமிழுடையாள்
தமிழுடையாள்
............................
மானுடை மதியுடையாள்
சிறு மயிரிழப்பின்
உயிர் துறக்கும்
மானுடக் கற்பு நெறியுடையாள்.
வானுடைக் கொடையுடையாள்
வளம் செழித்தோங்க
மாரியெனுமுடையணிந்து
மனமுருகும்
தாயுடை குணமுடையாள் .
சீருடையாள்
"சீறி நுழைந்த பெரும்புலிதனையே
சிறு முறங்காட்டிச் சாடி விரட்டிய
சங்கத்தமிழ் கதையுடயாள்
சாதித்த திறனுடையாள்.
அச்சம் புறவுடையாம்
அணிகலமோ மடமுடையாம்
மிச்சமாய் நாணமொடு
பயிர்ப்பும் நிறைச்சூடி
முத்துடைச் சொற்த்தறிக்கும்
முத்தமிழ் கருவுடையாள்.
அறமுடையாள்
நற்பண்புடை நிறமுடையாள்
தரமுயர இல்லாலெனும்
தகைமையெனும் முடிசூடி தலைவனையே உலகுடையாய்
சரணடையும் மரபுடையாள்.
எங்கள் தாயன்புத் தமிழுடையாள்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
