அன்பில் பூத்த மலர்கள்
அந்த பூந்தோட்டத்தில்
எந்த பூ எப்போது மலர்த்து
யாருக்குத் தெரியும்?
அன்பில் பூத்த
நம் பாசப்பூவும்
மலர்த்த நொடி தெரியாத
அதிசயம் தானே...!
எங்கு பிறந்தாலென்ன
எங்கு வளர்ந்தாலென்ன
அன்பின் வேர்க்கால்கள்
மண்ணில் பிணைத்தது
அண்ணன் தங்கை என்னும்
அழகான பந்தத்தில்...
என் அன்பில்
அடங்கிப்போன
பேரன்பின் காட்டாறு நீ...
கோப்பெருஞ்சோழனோ
பிசிராந்தையாரோ நாமல்ல...
சந்தித்தில்லை
ஆனாலும்
அறிவியல்
நம்மை பார்க்க வைத்தது
பேச வைத்தது
அன்பில் சங்கமிக்க வைத்தது...
என் பாசத்தின் நீட்சி நீ
அன்பின் மீட்சி நீ
கோபத்தில் வெளிப்படும்
உண்மையான அன்பின்
பானுமீனாள் நீ...