திறனும் திமிரும்
குறள்வெண்செந்துறை
அறிவோடும் ஆற்றலோடும் கூடிய
திமிரது பெருமை தருமே.
பதவியின் நிலையால் வந்திடும்
திமிரது எதிரியை ஆக்குமே
பணத்தினால் தம்மைப் பற்றும்
திமிரது தனிமையை தருமே
அழகினால் உள்ளம் புகுந்திடும்
திமிரது இழப்பைத் தருமே
வறட்டுத் தனத்தினால் ஆக்கும்
திமிரது மதிப்பை அழிக்குமே
புகழ்ச்சியின் எழுச்சியால் கிடைக்கும்
திமிரது தேய்ந்தே மறையுமே
கற்றுத் தெளிந்தால் கிடைத்த
திமிரது மனிதனாக்க வேண்டுமே
----- நன்னாடன்