ஆசை

என் ஆசை முன் ஓட
நான் அதன் பின் ஓடிநின்றேன்!

சிறிதானத் தடையானாலும்
நான் விண் தாண்டி நின்றேன்!

கண் மூடி ஓடாதே என்ற ஊராரை
நிந்தித்து வெறுத்தேன்!

நன்மையா தீமையா-விளைவை
சிந்திக்க மறுத்தேன்!

வெற்றான பாலைக்குள் இறுதியில்
நான் சென்று வீழ்ந்தேன்!

முற்றாகாது என் வாழ்வை
இறைஅன்பு காக்கும்!

எழுதியவர் : (23-Sep-15, 4:32 pm)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : aasai
பார்வை : 87

மேலே