இறைவனின் குழந்தைகள் - கற்குவேல் பா

இறைவனின் குழந்தைகள்
```````````````````````````````````````
இரயில் பெட்டிக்குள்
வலுத்த அவளது
கைத்தட்டல்க்கள்
வரிசையில் அமர்ந்திருந்த
மங்கையர் - அவர்களை
நின்று ரசித்திருந்த
இளையோர்
தின்று செரித்திருந்த
பெரியோர் என
பாலினம் , வசதி
வயது பாராமல்
அத்தனை செவிகளையும்
தனக்குச் சொந்தமாக்கிக்கொள்ள
ஏனோ தவறவில்லை !
- கற்குவேல் .பா