மாறாத உன் புன்னகை
பட்டாம்பூச்சி சிறகு
உலர்த்திய துளிகள்
பக்கம் இருந்த நீ
பழகிய நாட்கள்
பார்த்து ரசித்த
வானவில்
மஞ்சள் பூசிய
மாலை வெயில்
ஓடி விளையாடும்
முகில் கூட்டம்
அதை ஒளிந்து
ரசிக்கும் நிலவு
குதித்தாடும்
மழைத்துளி
அதில் குளித்தாடும்
புனாங்குருவி
உனக்கும் எனக்கும்
இடையான
பரஸ்பர வெப்பம்
அந்த இடைவெளிக்குள்
இருந்த காதல்
இவையாவும்
பழையது ஆயினும்
தினமும் புதுமையாய்
பூத்து கொண்டே
தான் இருக்கிறது
உன் புன்னகையை
போலவே....

