வேற்றுமையில் ஒற்றுமை

வேற்றுமையில் ஒற்றுமை
மொழியாலே பிரிந்திருந்தும்
***மதத்தாலே பிரிந்திருந்தும்
******குணத்தாலே நாமெல்லாம் இந்தியரே!
நிறத்தாலே பிரிந்திருந்தும்
***நிஜத்தாலே பிரிந்திருந்தும்
******உணர்வாலே நாமெல்லாம் இந்தியரே!
ஒரே இந்தியா! நமது இந்தியா!
***என்றும் வேற்றுமையில் ஒற்றுமையைக்
******காணும் இந்தியா! யா! யா!
ஒரே இந்தியா! நமது இந்தியா!
***இதில் உலகத்திற்கே முன்னோடிதான்
******நம்ம இந்தியா! யா! யா!
பல நூறு சாதி..
***பல கோடி வீதி..
******பரிதாப நீதி இங்கே உண்டு!
சில நேரம் கோபம்..
***சில நேரம் சண்டை..
******சில்லறைப் பிரச்சனைகள் நிறைய உண்டு!
இருந்தாலும் நாங்கள் இணைந்திருப்போம்..
எவர் எதிர்த்தாலும் தகுந்த பதிலளிப்போம்... (ஒரே இந்தியா.....)
அரசியலில் அடிதடி..
***அரசாங்கத்தில் குளறுபடி..
******என நூறு செய்திதினம் காண்பதுமுண்டு!
முல்லைப்பெரியார் முட்டுக்கட்டை..
***காவிரித்தண்ணீ வச்சுக்கிட்டேன்..
******என பக்கத்து மாநிலத்தால் துயரங்களுண்டு!
பெரும்பாலும் நாங்கள் ஒற்றுமையே..
அதை அரும்பாடாய் நிலை நாட்டிடுவோம்... (ஒரே இந்தியா.....)
போரென்றால் முன்னே..
***சேர்ந்தேதான் நிற்போம்..
******எதிரிபதற தூளாய் சிதற விரட்டியடிப்போம்!
பெருந்துன்பம் வந்தால்..
***ஆதரவாய் உதவி..
******துன்பம்தூர ஓடி ஒளிய புரட்டியடிப்போம்!
பரப்பாலே நாங்கள் சிறுதுளிதான்..
அன்பு மனதாலே நாங்கள் பெருங்கடல்தான்... (ஒரே இந்தியா.....)