கண்ணீர் வடுக்கள்

" கண்ணீர் வடுக்கள் "

இது இரண்டாவது தடவை

கூட்டத்தில்
ஓடும் உன்னை
தேடித் துரத்துவது யார் ?

என் எதிரி கடவுளா ?

நீ தெரிகிறாய்
ராஸ்கல் கடவுள் தெரியவில்லையே

கனவில் நீ
கனவைக் கலைத்தது - உன்
கண்ணீர் தான்

உன் நினைவை கவிதையாய் எழுதுவது
என் நனவுக் கண்ணீர் தான்

விழி திரட்டும் கண்ணீரே
விலை என்ன நான் தரவேண்டும்
விரைந்தே தான் தந்திடுவேன் - அதற்குள்
வினை(மரணம்) தரவா வந்திடுவாய்

எனை அலங்கரிக்கும் உன் உருவாம் என் நினைவே

கன்னங்களில் இருப்பது காயம் அல்ல
அழியாத காதல் தான்
கண்ணீர் வடுக்களாய்....

( கொசுறு : அடிக்கடி கனவு வருவதும்
அதில் நீ வருவதும்
அகிலத்துக்கு அழகல்ல...)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (26-Sep-15, 8:15 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : kanneer vadukkal
பார்வை : 141

மேலே