முகநூல் நட்பு
ஒட்டி உறவாடி,
தன் கதை பேசி,
உன்கதை சொல்லி,
ஆறுதல் கூறி ஆங்கங்கே விழும்போது தூக்கி நிறுத்தி,
வசனங்கள் பல பேசி, சிரித்து சிலாகித்து கேலியுடன் வசைபாடி,
உன்னை புரிந்து கொண்டு,
பின் உன்னை பற்றி யாதும் அறியாமல் பிதற்றுகிறான் பித்தன் என்று எள்ளி நகையாடி,
தனக்கொன்று வந்தால் தான் தெரியும் என்று கூறி விடைபெற்ற அவனை எண்ணியோ மனம் பதை பதைக்கிறது ?
பாசம் வைத்தவன் பாசாங்கு செய்வான் என்று தெரிந்திருந்தால் தூர விலகி நின்று இருப்பேன்.
பெத்த ,மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது தாய்மைக்கு உரிய வசனமாயிற்றே !
நண்பனுக்கு அமைந்து இருந்தால் நானும் என்னை தேத்தி கொண்டு தேறியிருப்பேன்.
முகத்திற்கு நேரே நம்முடன் வளர்ந்த பனை போல் அல்லவா இருந்தான் அன்று!
இன்று என் முகம் பனை இருந்த பாதை நோக்கியே இருக்கிறது,
அதிலிருந்து உதித்த மட்டைகளும் சற்று விலகி தென்படுகிறது.
கண்ணருகே இருந்த இருந்த பனை பட்டு விட்டு அதற்கே உரித்தான அதன் வடுவை மட்டும் விட்டு சென்றது.
முகத்திற்கு நேரே பழகிய நண்பர்களே பிரிந்து செல்லும் இக்காலத்தில்
முகநூல் நட்பு மட்டும் எம்மாத்திரம் !!

