ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் |
இடம் | : காரைக்கால் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 98 |
புள்ளி | : 29 |
பள்ளிப் பருவத்தில் இருந்தே கவிதை மேலும், புத்தகங்கள் மீதம் தீராக்காதல் உடையவன். நேரமின்மையால் பதிவுகள் ஏற்ற இயலவில்லை. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் இந்த கணக்கை உயிர்ப்பித்தேன்.
நண்பர்கள் நிறைய கூறி கேட்டிருகிறேன் காதல் அழகை அல்லது பணத்தை பார்த்து மட்டுமே வருமென்று !
சில சமையங்களில் காமம் கடந்து காதல் வசப்படும் என்று பச்சையாக கூறும் வேட்கையும் வேடிக்கையும் கொண்ட சில வேற்றுமையான மனம் கொண்டவர்களையும் நான் பல இடங்களில் சந்தித்திருகின்றேன்!
காதல் என்னும் அழகிய வார்த்தையை காமம் கொண்டு கொச்சைப்படுத்தும் ரகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்,
உண்மையாய் காதல் செய்பவனின் கண்கள் அவளின் கண்களுடன் கலக்குமே ஒழிய காதலியின் அந்தரங்களை ஆராயாது.
இந்த ரகப் பிரியர்களை பார்த்தால் ஏனென்று அறியாமல் கோபமும் சில சமயங்களில் அனுதாபமும் வருகிறது,
கனவில் கூட காதலியை கண்ட கோலத்தில் ப
வீட்டில் மாடி பரண் மேல் நின்று நிலாவை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கத்தை விட நிலா இன்று கூடுதலாக முறைக்கின்றது என்னை.நான் ரசித்தது அந்த வெண்ணிலாவை அல்ல,என் வெள்ளை நிலா அவளை. என் வெள்ளை நிலா அந்த வெண்ணிலவை விட சற்று பிரகாசம் அதிகமானவள்.
எனக்கும் அவளுக்கும் அருகருகே வீடு;அருகருகே இருக்கைகள் வகுப்பில்;
என்னை அவளுக்கு 9 வயதில் இருந்தே தெரியும். ஆனால் காதல் வந்ததோ 15 வயதில் தான்....
அன்று அந்த நிலா பூமி வந்து இறங்கிய நாள்.அவளுக்கே உரித்தான அழகிய சிகப்பு வண்ண சுடிதாரில் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.தூங்கியவனை வம்படியாக எழுப்பி சாக்லேட் கொடுத்தாள்.
ஹையோ,,,! என்னா அழகு...அந்த கணத்தில் இருந்து
மேகக்கூட்டங்கள் பூ தூவ,
மின்னல் கூட்டங்கள் நாதஸ்வரம் வாசிக்க,
இடிகள் கெட்டிமேளம் கொட்ட,
உன் பாத கொலுசுகளின் சப்தங்களோடு இனிதே நிறைவுற்றது நம் நடைப்பயணம்.!
என் முகம் பாராமல் என்னை சுமந்தவள்,
என் முகம் பார்க்க ஏங்கி தவித்தவள்,
முதல் முத்தமிட காத்துகொண்டிருந்தவள்,
மனதிலே தாலாட்டு இசைக்க பழகிகொண்டவள்,
விரல் விட்டு நாட்களை எண்ணி கொண்டு இருந்தவள்,
அறுசுவை அமுது படைக்க காத்து கொண்டிருந்தவள்,
ஆணா பெண்ணா என்று அறியாமல் ஆடை வாங்கி சேமித்தவள்,
பூவுலகுக்கு வரும் முன் காத்தவள், வந்தபின் தேற்றியவள்,
எனக்கு உயிர்கொடுத்த மூன்றெழுத்து “அம்மா”.
மேகக்கூட்டங்கள் பூ தூவ,
மின்னல் கூட்டங்கள் நாதஸ்வரம் வாசிக்க,
இடிகள் கெட்டிமேளம் கொட்ட,
உன் பாத கொலுசுகளின் சப்தங்களோடு இனிதே நிறைவுற்றது நம் நடைப்பயணம்.!
அன்பெனும் சர்க்கரை கலந்து, வெட்கமெனும் நீர் ஊற்றி,
காதலெனும் தேயிலையை சரியான விகிதத்தில் இட்டு,
பரிவெனும் கைகளில் ஏந்தி ,
பால் போன்ற வெள்ளை மனமுடன் அவள் எனக்கு ஈந்தமையால் அது தேநீர் ஆயிற்று “தேன் நீர்” ஆயிற்று.