ஒரு காதல் கதை
வீட்டில் மாடி பரண் மேல் நின்று நிலாவை ரசித்துக்கொண்டு இருக்கிறேன். வழக்கத்தை விட நிலா இன்று கூடுதலாக முறைக்கின்றது என்னை.நான் ரசித்தது அந்த வெண்ணிலாவை அல்ல,என் வெள்ளை நிலா அவளை. என் வெள்ளை நிலா அந்த வெண்ணிலவை விட சற்று பிரகாசம் அதிகமானவள்.
எனக்கும் அவளுக்கும் அருகருகே வீடு;அருகருகே இருக்கைகள் வகுப்பில்;
என்னை அவளுக்கு 9 வயதில் இருந்தே தெரியும். ஆனால் காதல் வந்ததோ 15 வயதில் தான்....
அன்று அந்த நிலா பூமி வந்து இறங்கிய நாள்.அவளுக்கே உரித்தான அழகிய சிகப்பு வண்ண சுடிதாரில் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.தூங்கியவனை வம்படியாக எழுப்பி சாக்லேட் கொடுத்தாள்.
ஹையோ,,,! என்னா அழகு...அந்த கணத்தில் இருந்து தான் அவள் என் காதல் தேவதையாய் மனதிலே வலம் வந்தாள்
எங்கள் பள்ளி எங்கள் ஊரில் இருந்து மூன்று ஊர் தள்ளி உள்ளது. நானும் அவளும் ஒன்றாகத்தான் பள்ளிக்கு செல்வோம். இருந்ததும் அவளிடம் பேசி ஒரு வருடம் ஆக போகிறது.
என்று அவள் மேல் காதல் பூத்ததோ அன்றே சண்டை வந்துவிட்டது.
அவளுக்கு 17வயது தொடங்க இருந்த நாள். அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது வழக்கம். அன்று சொல்ல வில்லை. அன்றிலிருந்து அவள் என்னிடம் பேசவே இல்லை
இருப்பினும் பள்ளிக்கு சேர்ந்தே செல்வோம். நான் விடுப்பு கொண்டால் அவளும் விடுப்பு கொள்வாள். காரணம் தனியே செல்ல அவளுக்கு பயம்
நாளை காதலை சொல்ல வேண்டும் என அவளையே பார்த்திருந்தேன். அவளும் என்னையே முறைந்திருந்தாள். பிடிக்கவில்லை என்றால் கீழே போக வேண்டியது தானே,
அவள் அவ்வாறு செய்ததே இல்லை. நான் நிற்கும் வரை அவளும் நின்றுக்கொண்டு முறைப்பாள்.
வழக்கம் போலவே நானும் அவளும் பள்ளிக்கு செல்ல அந்த ஒற்றையடி பாதை வந்தது. நான் லட்டு என்று கூப்பிட்டேன். ஆம் அவள் பெயர் லாவண்யா தான். ஆனால் அவளை லட்டு என்று கூப்பிடுவதே என் வழக்கம்.
அவள் கேட்டும் கேளாதவளாய் நடந்தாள். நான் அசையாமல் நின்றேன். எப்படியும் பத்தடி நடந்திருப்பாள். மேடத்திற்கு பயம் வந்துவிட்டது போல அவளும் நின்றுகொண்டு என்னையே பார்த்தாள்.
ஓரு ஐந்து நிமிடம் அசையாமல் நின்றிருப்போம் வா என கண்களால் பேசினாள்.
இப்படித்தான் அவள் உதடு பேசியதை விட கண்கள்தான் அதிகம் பேசும் என்னிடம்,
அவள் அருகே சென்றேன்.அவள் நடக்க ஆரம்பிக்க;
லாவண்யா என்றேன். அவள் திரும்பினாள்.
I love u என்று ஒரு வெள்ளை இதய வடிவத்தாளில் அவள் பெயரை முழுவதும் நிரப்பி கொடுத்தேன். அவள் வாங்கிக்கொண்டு என்ன இது என நக்கலாக கேட்டாள். நான் அவள் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தேன். அவளும் தலையில் தட்டி விட்டு பின்னாலயே நடந்தாள்.
நீ என்ன லவ் பண்றியா என்றேன் அவளிடம்...
அவள் சற்றும் யோசிக்காமல் ஒரு வாரம் டைம் கொடு என்றாள்.இதுவே எனக்கு ஆச்சரியம் தான்.
ஒரு வாரம் கடந்திருக்கும்...அதை சொல்ல வேண்டுமே??? ஒரு வாரம் கடக்க ஒரு யுகம் ஆனது போல் ஆயிற்று...
இன்று தான் அவள் பதில் சொல்வதாய் சொன்ன நாள்.
நானும் அவளும் ஒரு ஊர் கடந்திருப்போம். ஒற்றையடி பாதை ஆரம்பிக்கும் நேரம்....
நீ எப்போதுல இருந்து நீ என்ன லவ் பண்ற என்றாள். நான் லட்டு நீ 10 படிக்கும் போது பிறந்தநாள் அப்ப சிகப்பு கலர் சுடில எங்க வீட்டுக்கு வந்தல அப்போத்துல இருந்து என்றேன்.
நான் எப்போதுல இருந்து உன்ன லவ் பண்றேனு சொல்லு? என்றாள்
நான் சற்று வழிந்தேன்
10 பரிச்சை அப்ப நான் hallticket வீட்டுல மறந்து வச்சிட்டு வந்துட்டனே...எனக்காக நீ ஓடி போய் எடுத்து வந்த...என்னால நீயும் லேட் ஆ எழுதுனல பரிச்சை... ஒரு thanks கூட எதிர்பார்க்காம இனி மறக்காத லூசுனு முதுகுல தட்டுனல அப்போத்துல இருந்து உன்னய லவ் பண்றேன் அம்மு என்றாள்,..
ஆம் என் பெயர் நவின் தான் அதுக்கு என்ன இப்ப....என் செல்லம் என்ன கூப்பிடுறாளோ அது தான் என் பெயர்
அவள் சொல்ல சொல்ல பழைய நினைவுகள் புதிய நினைவுகள் மாறி மாறி வந்து சென்றது மனதில்; கொஞ்சம் விட்டு இருந்தா அழுது இருப்பேன் அவ்வளவு சந்தோசம்...
நீ ஏன் லட்டு லவ்வ சொல்லவே இல்ல...
நான் சொல்லனும் நினைப்பேன்,நீ தான பேசாம போவா...அட எறும நீ தானடி பேசம போன என்றேன்.
சரி எதுக்கு இப்ப எறுமனு சொன்ன....லவ் பண்ணா என்ன வேணாலும் சொல்லுவியா... என்றாள் (இவளுக்கு இதே வேலை தாங்க...வேற ஒன்னும் இல்ல உடம்பு புல்லா கொழுப்பு அதான் இப்படி
நீங்க ஒன்னும் தப்பா நினைச்சிடாதிங்க)