பதிமூன்றாவது பௌர்ணமி இரவு

உதட்டில் இருந்து சொட்டும் ரத்தம்,
தரை முழுதும் படர்ந்திருந்தது.

பளபளக்கும் கத்தி கையில் ஏந்தி,
புன்னகித்து நிற்கிறான் ஒருவன்
எதிரே ஆலுயரக் கண்ணாடி.

கத்தி முனையில் துடிப்படங்காத
கடிபட்ட இதயம்,
தொங்கிக் கொண்டிருந்தது.

கீக் கீ! கீக் கீ!! கீக் கீ!!!
அலாரம் சிணுங்கி
கனவில் இருந்து விழித்தேன்.
மணி 12 பௌர்ணமி இரவு.

உடல் நடுக்கமாய் நடுங்குகிறது,
வியர்த்து புழுங்குகிறது.,
இது பதிமூன்றாவது கனவு.

என் முதல் பௌர்ணமி இரவு
கனவில் அவளைக் கண்டேன்.

நான் அடிக்கடி செல்லும் ஆஸ்பத்திரியின்,
பிணக் கிடங்கரைமுன்
முக்காடிட்டு நின்றிருந்தாள்.

அடித்தது சூறைக் காற்று,
முக்காடு விலகி,
முழு நிலவு தெரிந்தது...

புரியாமல் உற்றுப் பார்த்தேன்,
உரஞ்சிக் கொண்டாள்.
உரியப் பட்ட நான்,
அவளின் உள் புகுந்தேன்.

எங்கோ கூடிச் சென்றாள்....
பூமி கடந்து,
வேறொரு பச்சை கிரகத்திருக்கு,
அங்கே சூரியன் பச்சை,
நிலாப் பச்சை,
நட்சத்திரம் பச்சை,
மணல் பச்சை,
மரம் பச்சை,
மாங்காய் பச்சை....!

பச்சை பச்சையாய் பார்த்துப் பார்த்து
இச்சை கொண்டு இட்சிக்க
அருகில் சென்றேன்....

கீக் கீ! கீக் கீ!! கீக் கீ!!!
அலாரம் சிணுங்கி
கனவில் இருந்து விழித்தேன்.
மணி 12 பௌர்ணமி இரவு.

அன்று மதியமே அவளைக்
கண்டேன், தேயிலைத் தோட்டத்தில்,
பார்த்த மறுகணமே ஓடோடிச் சென்று
அவளைக் கட்டிப் பிடித்தேன்..

தேயிலை பறித்தபடி இருந்தவள்
கால் இடறி கட்டிக் கொண்டே
தோட்டத்தில் மேலிருந்து கீழ்
உருண்டே சென்று பள்ளத்தில்
விழுந்தோம்!

இவளே என் வாழ்கையை
பசுமை குறையாமல்
பார்த்துகொள்வாள் என முடிவிசெய்த்து,
மணந்து கொண்டோம்.

அருமையாய் கழிந்தது
முதல் மாதம்.

இரண்டாவது கனவு...
கை கால்கள் கயிறால் கட்டுண்டு
தரையில் கிடக்கிறேன்...
அருகில் இருக்கும்
மனைவியோ அழுதுகொண்டே இருக்கிறாள்....

மூன்றாவது கனவு....
தலை வலியோ தலை வலி,
தாங்கமுடியாமல் கத்துகிறேன்,
யாருமே அருகில் இல்லை,
கையில் கிடைக்கும் பொருளை
எல்லாம் உடைகிறேன்....!

இப்படியே ஒவ்வொரு
பௌர்ணமி இரவுகள்
என்னை ஏதோ ஒரு பைத்தியம்போல்
சித்தரித்தது...!

இது என்னுடைய
பதிமூன்றாவது கனவு...!
என் எல்லாக் கனவுகள் போல
இதுவும் பலித்து விட்டால்?

ஐயோ!!!
இன்னும் சில மணி நேரத்தில்
என் இதயத்தை யாரோ ஒருவன்
குத்தி கிழித்து சுவைக்கப்
போகிறான்....!

ஐயோ ஐயோ...!
நான் சாக மாட்டேன்!
சாகவே மாட்டேன்...

என்னைக் காப்பற்றுங்கள்,
இந்த ஒரு முறை
என்னைக் காப்பற்றுங்கள்...

என்று கத்தியபடி
வீட்டைத் திறந்து கொண்டு,
தெருவில் ஓடுகிறேன்...

இரவு ரோந்து போலீஸ் ஜீப் தென்பட,
அய்யா! அய்யா!! என்னைக் காப்ற்றுங்கள்
என்ன கெஞ்சினேன்...!

வண்டியில் இருந்து சிரித்தபடி
இறங்கிய இன்ஸ்பெக்டர்,

என்ன தம்பி?
உன் அப்பாவி சம்சாரம் எங்க?
இந்தப் பௌர்ணமியும் பிரச்சனையா ?
நல்லா மருந்துவாங்கி குடி,
உடம்ப பார்த்துக்கோன்னு சொன்னபடி
கொஞ்சம் உற்று நோக்கி
உக்க்ரமானார்!

ஹே தம்பி,
உன் உதட்டுல்ல என்ன ரத்தம்..........??????

எழுதியவர் : கணேஷ்குமார் balu (28-Sep-15, 7:59 pm)
சேர்த்தது : Ganeshkumar Balu
பார்வை : 5991

மேலே