காதலும் காமமும்

நண்பர்கள் நிறைய கூறி கேட்டிருகிறேன் காதல் அழகை அல்லது பணத்தை பார்த்து மட்டுமே வருமென்று !

சில சமையங்களில் காமம் கடந்து காதல் வசப்படும் என்று பச்சையாக கூறும் வேட்கையும் வேடிக்கையும் கொண்ட சில வேற்றுமையான மனம் கொண்டவர்களையும் நான் பல இடங்களில் சந்தித்திருகின்றேன்!

காதல் என்னும் அழகிய வார்த்தையை காமம் கொண்டு கொச்சைப்படுத்தும் ரகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்,

உண்மையாய் காதல் செய்பவனின் கண்கள் அவளின் கண்களுடன் கலக்குமே ஒழிய காதலியின் அந்தரங்களை ஆராயாது.

இந்த ரகப் பிரியர்களை பார்த்தால் ஏனென்று அறியாமல் கோபமும் சில சமயங்களில் அனுதாபமும் வருகிறது,

கனவில் கூட காதலியை கண்ட கோலத்தில் பார்க்கும் ரகத்தைச் சேர்ந்தவனல்ல நான் என்பது உனக்கு புரிந்ததால் மட்டுமே நீ என்னுடன் அன்னயோமாய் பழகுகிறாய்.

காமத்திற்கும் காதலிற்கும் வேறுபாட்டை இந்த வேடிக்கை மாந்தரிடையே புரிய வைக்கவோ என்னையும் உன்னையும் அனுப்பினான் இறைவன் . !!

எழுதியவர் : ராகவேந்திரன் பாலகிருஷ்ணன (26-Oct-15, 1:59 pm)
பார்வை : 45

மேலே