உச்சி நிலைக்கு
நான் எழுதி வெளியிட்ட புத்தகம் எளிய நடையில் தமிழ் பாடல்கள் ... அதிலிருந்து ஒரு தத்துவம்/ வாழ்கை பாடல் இங்கே சமர்பிக்கப்பட்டுள்ளது....
தேடல் என்பது இல்லையெனில்
உழைக்கும் எண்ணம் இருக்காது
ஊடல் என்பது இல்லையென்றால்
கூடலுக்கும் அவசியம் ஏது
பத்தோடு பதினொன்றாய் நீ இருந்தால்
பின் நோக்கி சென்றிடுவாய் உண்மையில்
போரிடு போரிடு வாழ்கையின்
உச்சி நிலைக்கு ஓடிடு....
திருமதி மைதிலி ராம்ஜி