அல்ப வகைகள் உங்களுக்காக
இது ரொம்ப அல்பதனம்”
“புத்தி ஏன் இப்படி அல்பதனமா போகிறது”
“சரியான அல்பம்”
இப்பிடி நெறைய பேச்சு வாக்குல கேட்டுருப்பீங்க...
சில அல்ப வகைகள் உங்களுக்காக...
1.நொறுக்ஸை கொறித்துக்கொண்டு இருக்கும் போது பக்கத்து வீட்டு நட்பு உள்ளே நுழையும் போது நொறுக்ஸ் டப்பாவை மறைத்து வைப்பது.
2.கணவரின் பாக்கெட்டில் இருந்து நூறு இருநூறை எடுத்து விட்டு அதை சொல்லாமல் இருப்பது.
3.டிபன் பாக்சில் லஞ்சை கட்டிக்கொடுத்துவிட்டு பிள்ளையிடம்”டேய்..உனக்காக நிறைய நெய் விட்டு பிரியாணி பண்ணி இருக்கேன்.யாருக்கும் கொடுத்து உன் வயிற்றை காயப்போடாதே,சமர்த்தா நீயே அத்தனையும் சாப்பிட்டுடனும்”பையனுக்கு அட்வைஸ் பண்ணுவது.
4.கெட்டுப்போன உணவுப்பொருட்களை குப்பையில் கொட்டாமல் வாசலுக்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு கொடுப்பது.
5.காய்ச்சலில் படுத்து மூன்று நாள் லீவு போட்டு விட்டு வரும் வேலைக்காரியிடம் “இந்த மூன்று நாள் சம்பளத்தையும் பிடித்துக்கொண்டுதான் தருவேன்”என்று மல்லுக்கு நிற்பது.
6.வீட்டுக்கு வரும் விருந்தினரை வாயற வாங்க வாங்க என்று அழைத்து விட்டு மனதார “இதுக எதுக்கு வந்து தொலைக்கனும்”என்று நினைப்பது.
7.உறவினர்,நட்பு வீடுகளுக்கு சென்று விட்டு “இவளா..சரியான வடிகட்டின கஞ்சம்.கழுநீர் ரேஞ்சில் ஒரு ஆறிப்போன காபியைத்தர்ரா.தராதரம் தெரியாதவள்”என்று புலம்புவது.
8.மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்ய மனதில்லாமல் பிறருக்கு மிஸ்டு கால் கொடுப்பது.அல்லது ஒரு ரிங் அடிக்கக்கூட அவகாசம் கொடுக்காது கட் செய்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த எண்ணில் இருந்து இருந்து கால் வரும் வரை காத்திருந்து “காலையில் போன் செய்தேனே.எடுக்கவே இல்லை”என்று புழுகுவது அல்லது கால் செய்து அழைத்துவிட்டு “போனில் பைசா முடியும் தருவாயில் உள்ளது.நீ கால் பண்ணு”என்று உடான்ஸ் விடுவது.
9.வீட்டுக்காரரிடம்”என்னது இந்த சண்டே உங்க பிரண்ட் குருமூர்த்தி வீட்டுக்கு நீங்களும் உங்கள் பிரண்ட்ஸும் டின்னருக்கு போகப்போறீங்களா.பேஷா போய்ட்டு வாங்க.கூடவே நம்ம குட்டி கிரீஷையும் கூட்டிட்டு போய்டுங்க.ஆனால் அதுக்கு அடுத்த வாரம் எல்லாப்படைகளையும் இங்கே அழைசுட்டுப் வந்துடாதீங்க.ஆழாக்கு அரிசி சமைக்கறத்துக்குள் எனக்கு டங்குவார் அறுந்து போறது.அத்தனைக்கும் விருந்து பண்ண நம்மால் முடியாதுப்பா.”
10.மற்றவர்களுக்கு வரும் மெயில்,கடிதம் ,போன்றவற்றை பார்ப்பது.
11.”யாரு..மாலதியா..எப்படிப்பா இருக்கே.என்னது..வீட்டுக்கு வர்ரியா..பிள்ளகளையும் அழைச்சுட்டு வர்ரியா.வேண்டாம் வேண்டாம்...நானும் பக்கத்துவீட்டு அம்மாவும் ஷாப்பிங் போகணும்ன்னு ஏற்கனவே பிளான் போட்டாச்சு.எதுக்கு நீ கஷ்டப்படனும்.அடுத்த வாரம் நானே வர்ரேன் சரியா”என்று போனில் சொல்வது.
12.”காய்க்காரம்மா..ரெகுலராக உன் கிட்டேதான் காய் வாங்கறேன்.என்ன விலை விற்றாலும் இந்த கருவேப்பிலையும் கொத்துமல்லியும் கொசுறா கொடுத்துத்தான் ஆகனும்.இதுகளை நான் பைசா தந்து வாங்கவே மாட்டேன்.ஆமா சொல்லிட்டேன்.”
இதுல நீங்க எந்த வகை...?
நன்றி-ஸாதிகா
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
