மீட்டெடுக்க வா
கைகள் வலிக்க வலிக்க எழுதுகிறேன் உனக்கான காதல் கடிதங்கள்...
கண்கள் சிவக்க சிவக்க அழுகின்றேன் உன்னை காணாத துக்கத்தில்....
உன்னை நினைத்து நினைத்து ஒவொரு நொடியும் உருகுகிறது எனது உயிர்...
ஏக்கத்தில் ஏங்கி ஏங்கி
ஓங்கி எழும் பெருமூச்சினை உள்ளுக்குள்ளேயே புதைகிறேன்..
ஒவ்வொரு நாளும் பொழுதும்
நரகமாய் மாறி என் நெஞ்சை தைக்கிறது கூர் முள்ளாய்...
பிரிவென்பது மூன்றெழுத்து..
வெறும் மூன்றே எழுத்து ஆனால் அத்தான்....
மாபாரதத்தை விட மிக நீண்ட காவியம் அது மட்டுமே....
முடியவில்லை..
பிரிவின் துயர்
தாள முடியவில்லை...
உன் கோபக்கனல் குறைத்து எனை மீட்டெடுக்க வா..