எல்லாம் அவள் செயல் 4
நீயென்னவோ எளிதாக சொல்லி நகைக்கிறாய்
ஓட்டைப் பஸ்
தகர டப்பா என்று
நீ செல்லும் கல்லூரிப் பேருந்தை
ஆமாம்
அதுவும் நீ சொல்வது போல்தான்
நேற்றுதான் பணிமனை சென்று வந்தது
ஆனால் இன்றோ..?
அரை கிலோமீட்டர் அப்பால் வரும்போதே
பறையடித்து வருகிறது பாவம்.
ஆனால்
பரிகாசம் பேசினாலும் பரவாயில்லையென்று
அது அடிக்கடி நோய்வாய்ப்பட்டு
உயிர் ஓலமிட்டு வருவதே
நீ நினைக்க வேண்டும் என்பதற்காகதான் என்று
அதற்கு மட்டும்தானடி தெரியும்...