காத்திருத்தல்

உனக்காக காத்திருக்கும் நிமிடங்களில் தான்
நான் என் காதலை முழுவதுமாய் உணருகின்றேன்

காத்திருத்தல் சுகம்
உன்னக்காய் காத்திருத்தல் தவம்

காத்திருக்கும் தருவாயில்
நம் நினைவுகளை அசைபோடுகின்றேன்

காத்திருக்கும் தருவாயில்
உன் பெயரை நாக்கு தேயும் அளவு உச்சரிக்கின்றேன்

உனக்கான என் செய்தியை
தூது அனுப்புகின்றேன்

பதிந்திருக்கும் காலடி சுவடுகளில்
உன் கால் தடம் தேடுகின்றேன்

மனதிற்குள் என் காதலை சொல்லி
அது மரம் எங்கும் மோதி
என் காதில் எதிரொலிப்பதை உணருகின்றேன்

எந்த ஆண் மகனும்
கண்ணனுக்கு நிறைவாய் இல்லை
உன்னை தவிர

எல்லா பார்வைகளிலும் உன் பார்வை
தனித்தே தெரிகின்றது

இந்த காதல் மிகவும் பொல்லாதது
உன்னுடன் இருக்கும் பொது
புட்டிபாம்பாய் அடங்கிவிடுகிறது
தனிமையில் பேயாட்டம் ஆடுகிறது

இதோ நீ வரும் செய்தி தெரிகின்றது
மெல்லிய கற்று, குயிலின் கானம்,
இதமாய் ஒரு மண்வாசனை

வந்துவிட்டாய்
என் உயிர் வருட
என் கனவுகளுக்கு வர்ணம் பூச.....

எழுதியவர் : keerthana (30-May-11, 10:07 pm)
சேர்த்தது : ஆத்மதர்சனா
பார்வை : 1905

மேலே