உலகநெறி ---- தரவு கொச்சகக் கலிப்பா

உருக்குலைந்து போய்விட்ட உறவுகளின் நிலைகண்டு
கருசுமந்த தாயவளோ கண்ணீரில் நின்றிடுவாள்
நெருப்பெனவே கொதிக்கின்ற நெஞ்சமதில் சொல்லியுமே
திருத்துகின்ற தீவினைகள் தீர்க்கின்ற உலகநெறி .


வருத்தத்தின் வேதனையால் வந்திடுமே வார்த்தைகளும்
கருத்தாழம் மிக்குடைய கள்ளமில்லா வாழ்வுநெறி .
விருப்பத்தில் கற்றிடுவோம் விளைந்திடுமே நல்வாழ்வு .
உருவாக்குவோம் புத்துலகை உன்னத உலகநெறி .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (28-Sep-15, 10:53 pm)
பார்வை : 113

மேலே