என் அழகே என் அம்மா…
இவ்வுலகிற்கு தெரியாதம்மா – நீ தான்
உலக அழகி என்று!
கண்ணம்மா நீ என்றும் என்
கண்ணுக்கு அழகம்மா
அம்சம்மா என்னை நீ
அன்பிலே ஆளாக்கினாய்
அறிவிலே மேலாக்கினாய்
நீ நிறைய படிக்காவிடலும்
உன்னிடமிருந்து நான்
கற்பது ஏராளம் அம்மா
என் துன்பக்கடலை நொடிபொழுதிலே
வற்ற வைத்து விடுவாயே-என் செல்லம்மா
என் சிரத்துக்கு
சிம்மாசனமாய்ன் –உன்
மடியை கொடுபாயே!
நீ என் உயிரம்மா
என்னையும் பெற்று வலியையும்
பெற்ற என் தாயே
நீ அன்றழுத கண்ணீருக்கு
கைமாறேதும் நான் செய்யத்தகுமோ
என் உயிரே!
பேரன்பே என் அம்மா
கற்பக சுடரே
வைடூரிய மாமணியே
என் அழகே என் அம்மா!..