ராஜஸ்ரீ - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ராஜஸ்ரீ |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 27-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 14 |
ஊசிபோல் மெல்லியதாய்
ஊற்றியது அன்று மழைத்தூறல்
செடிகள் நனைந்து
மரம் யாவும் குளிர்ந்து
மழைநீர் ஓடைகளாய் உருவெடுத்தது
சிரிப்பூட்டும் போது
சிரிக்கும் குழந்தைகளாய்
சிரித்துக்கொண்டே நனைந்தது
அன்றலர்ந்த மலர்கள்
சிறகுகளை வீசும் பறவைகளாய்
தன்மேல் விழும் மழையில்
மேலும் கீழுமாய் ஆடியது
பசுமைமாறா இலைகள்
கடலில் தாவி விளையாடும்
மீன்கள் போல விழுந்தோடியது
கனிகளும் விதைகளும்
எவரும் வெளியில் தலைகாட்டவேயில்லை
அவள் மட்டும் வெளியே வந்தாள்
தன் பதமலரால் நீரை கிழித்தாள்
தேனூறிய மலரை-தன்
கார்கூந்தலில் செருகினாள்
மர உச்சியில் விழும் நீரை
தண்டு வாங்கி இலைகளுக்கு கொடுக்க
இலைகளதை நிலத
தான் பெற்றெடுத்த குழந்தைகள்
பாராட்டு வாங்குவதை போலிருந்தது-தான்
படைத்த கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள்
கல் தடுக்கி நா அழுகுறப்ப
கல்ல குத்தஞ் சொல்லி
தோள் மேல தூக்கிப் போன என் அப்பா
காச்சலுன்னு வந்தப்ப
தொப்புள் கொடிய அத்துவிட்ட அம்மா கூட
கசப்பான மருந்தொன்ன சங்குல ஊத்தி வைக்க
எம்புள்ளைக்கி இது வேணாமுன்னு இனிப்பான
மருந்து கொடுத்த என் அப்பா
கடன்பட்டு நின்னாலு கஷ்டத்துல
வாழ்ந்தலு கந்தலா உழைக்கிற நீ
என்னைக்குமே காட்டுராசா தாம்பா
கூரையில வாழ்ந்தலு கொசு கூட
கடிக்காம காத்து வந்த என் அப்பா
கோபக்காரன்னு ஊருல உன்ன சொல்லுவாங்க
குணமுள்ள குபேரன்னு எனக்கு தா தெரியும்.
அன்புள்ள என் அப்பா…
கல் தடுக்கி நா அழுகுறப்ப
கல்ல குத்தஞ் சொல்லி
தோள் மேல தூக்கிப் போன என் அப்பா
காச்சலுன்னு வந்தப்ப
தொப்புள் கொடிய அத்துவிட்ட அம்மா கூட
கசப்பான மருந்தொன்ன சங்குல ஊத்தி வைக்க
எம்புள்ளைக்கி இது வேணாமுன்னு இனிப்பான
மருந்து கொடுத்த என் அப்பா
கடன்பட்டு நின்னாலு கஷ்டத்துல
வாழ்ந்தலு கந்தலா உழைக்கிற நீ
என்னைக்குமே காட்டுராசா தாம்பா
கூரையில வாழ்ந்தலு கொசு கூட
கடிக்காம காத்து வந்த என் அப்பா
கோபக்காரன்னு ஊருல உன்ன சொல்லுவாங்க
குணமுள்ள குபேரன்னு எனக்கு தா தெரியும்.
அன்புள்ள என் அப்பா…
பூப்பரிக்கும் பூஞ்சோலையிலே
பூத்துக்குலுங்கும் புஷ்ப ரோஜா
நாம் நேசிப்பவர் நமக்கு செய்த துரோகத்தை எப்படி மறப்பது?