அன்புள்ள என் அப்பா

கல் தடுக்கி நா அழுகுறப்ப
கல்ல குத்தஞ் சொல்லி
தோள் மேல தூக்கிப் போன என் அப்பா
காச்சலுன்னு வந்தப்ப
தொப்புள் கொடிய அத்துவிட்ட அம்மா கூட
கசப்பான மருந்தொன்ன சங்குல ஊத்தி வைக்க
எம்புள்ளைக்கி இது வேணாமுன்னு இனிப்பான
மருந்து கொடுத்த என் அப்பா
கடன்பட்டு நின்னாலு கஷ்டத்துல
வாழ்ந்தலு கந்தலா உழைக்கிற நீ
என்னைக்குமே காட்டுராசா தாம்பா
கூரையில வாழ்ந்தலு கொசு கூட
கடிக்காம காத்து வந்த என் அப்பா
கோபக்காரன்னு ஊருல உன்ன சொல்லுவாங்க
குணமுள்ள குபேரன்னு எனக்கு தா தெரியும்.
அன்புள்ள என் அப்பா…

எழுதியவர் : ராஜஸ்ரீ (1-Oct-15, 11:42 am)
Tanglish : anbulla en appa
பார்வை : 133

மேலே