சந்தோஷ் அண்ணாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஒரே கருவறையில்
ஜனிக்கவில்லை .
ஒட்டிக்கொண்டு பிறக்கவும்
இல்லை .

உரிமையில் அண்ணன் என்றழைத்தேன்
உறவினில் தங்கையாய்
தத்தெடுத்துக்கொண்டான்.

எழுதுகோல் இவனின் முதல் மனைவி .
எழுத்துக்கள் இவனது
செல்லக் குழந்தைகள்

எழுச்சி மிகு வரிகள் சொல்லும்
இவன் வீரம் .
பேசும் சில கவிகள் சொல்லும்
இவன் வலிகள்.

துரோகம் என்றால் இவன் விழிகள்
அனல் கக்கும் .
தூய அன்பென்றால் இவன் மனம்
குளிர் நிலவாகும் .

கனவுகள் நிறைந்த இவன் பாதையில்
குத்திக் கிழித்திடும் முற்களையும்
பூக்கள் என்றே நினைத்திடுவான்
புது உலகம் தேடி நடைபயில்வான் .

தமிழன் என்பதால் திமிர் உண்டு
தன் தாய்போல் தமிழோடும்
காதல் உண்டு .

குழந்தை போன்ற நல்ல உள்ளம் .

கொடுப்பதில் கர்ணன் போல்
எண்ணம் .

கவிஞன் கலைஞன் என் அண்ணன்
பூமி தொட்ட நாள் பொன்நாள் இந்நாளாம்.

தொடுத்திட நினைத்தேன் ஓர் வாழ்த்துப்பா
தோற்று நின்றது வார்தையப்பா .

தொடுத்திட வந்தேன் பாமாலை
நாளை என் அண்ணன்
தோளினில் ஆடிட பூமாலை .

வாழ்த்திட வாருங்கள் தேவர்களே
இவன் வாழ்ந்திட வேண்டும்
நூறு ஆண்டுகளே ...!!

என் அன்பு அண்ணாகுட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
Happy Birth day Annakutty....:-)

எழுதியவர் : கயல்விழி (29-Sep-15, 7:23 am)
பார்வை : 355

மேலே