என்னாள்

என்னாள்...!

முன்னாள்! - முனகி
செல்வாள்! - அந்த
முகிலாள்! - முகிழும்
பொன்னாள்!

இன்னாள்! - இனிமை
தந்தாள் - அந்த
இதழாள்! - இனிக்கும்
இளையாள்!

பண்னாள்! - பழகி
படைத்தாள்! - அழகு
மொழியாள்! - அன்பின்
நிதியாள்!

தன்னாள்! - பூக்க
வந்தாள் - அந்த
தளிராள்! - மணக்கும்
நெஞ்சாள்!

கண்னாள்! - கவிதை
சொன்னாள் - அன்பு
பெண்னாள்! - இன்பம்
என்னாள்!

என்னாள்! - எண்ணம்
பிரியாள்! - இசை
மதியாள்! - உயிர்க்கு
விழுதாள்!

எழுதியவர் : இராக. உதயசூரியன். (29-Sep-15, 8:10 am)
சேர்த்தது : இராக உதய சூரியன்
பார்வை : 91

மேலே