நண்டுடன் விளையாடு கிறேனே

கீழ்க்கடலின் ஓர்சிறு
தீவின் கடற்கரை வெண்மணலில்,
கண்களில் ஒளிர்கின்ற
கண்ணீர்த் துளிகளுடன் நானும்
நண்டுடன் விளையாடு கிறேனே!

இப்பாடலின் ஆதாரம்:

Ishikawa Takuboku என்ற கவிஞர் எழுதிய கீழேயுள்ள பாடல்.

On the white sand
Of the beach of a small island
In the Eastern Sea
I, my face streaked with tears,
Am playing with a crab.

’டங்கா’ என்பது ஒரு வகை ஜப்பானிய பாடல் வகை.

இது 5 வரிகள் கொண்ட 31 அசைகள் அமைந்தது.

1, 3 வரிகளில் 5 அசைகளும், 2, 4, 5 வரிகளில் 7 அசைகளும் வர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-15, 8:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

மேலே