kavithai

தோழி
என்னையே எனக்கு அறிமுகப்படுத்தினாய்
எனக்குள் ஒரு புது
நம்பிக்கையை தந்தாய்

நீ இலலாத நேரங்களில்
உணர்ந்தேன்
உன்னை எவ்வளவு நேசிக்கிறேன்
என்று

வளி இல்லாமல் மனிதன் இல்லை
உன் அன்பில்லாமல் நான் இல்லை

நீ பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும்
ஏதோ எனக்கு புதிதாகவே
தோன்றுகிறது
உன்னை நேசிப்பதாலோ என்னவோ
தெரியவில்லை

தாயின் பாசம் அது
மறு வீடு செல்லும் வரை
தந்தையின் பாசம் அது
நாம் வளரும் வரை
கணவனின் பாசம் அது
விவாகரத்து வரை
பிள்ளைகளின் பாசம் அது
முதியோர் ஆகும் வரை
ஆனால் தோழி உன்
பாசமோ
அது என் உயிர் உள்ளவரை

எழுதியவர் : shafra (29-Sep-15, 9:30 am)
பார்வை : 76

மேலே