நிராசை
காதலோ கருவிழி பாய்தலோ
கலக்கமிருக்குமிடத்தில் நல்ல கனவுகள் இல்லை
தென்றலோ தேனருவி ஸ்பரிசமோ
தொலைவு நீழுமிடத்து நல்ல தொனிகள் இல்லை
சுவர்க்கமோ சுரங்கப்புதயலோ
சுமைதாங்கும் சூழலில் நல்ல சுவைகள் இல்லை
ஆடம்பரமோ வைர ஆபரணங்களோ
ஆசைகள் தீராதவிடத்து நல்ல படைப்புகள் இல்லை