ஆண்-பெண் நட்பு

ஆர்ப்பரிக்கும் ஆனந்தம்
துடிதுடிக்கும் துன்பம்-இரெண்டிலும்
புதையுண்டு போகாமல் மீண்டெடுக்கும் நட்பு
பொறாமை கொள்ளாத நட்பு
திருமணம் ஆனாலும் மாறாத நட்பு
இந்த ஆண்-பெண் நட்பு
உலகம் கேலி பேசலாம் வசை பாடலாம்
ஆதவனுக்கு எங்கே தோற்றம் மறைவு
நாமல்லவா வலம் வருகிறோம்
கவலை தேவையில்லை-ஏனென்றால்
உலகம் அறியும் எது உண்மை என்று
ஆனால் சொல்வதோ இல்லாத ஒன்று
அதியமான் அவ்வையாரின் நட்பை இப்போதும் வியக்கிறோம்
அதை போன்று இந்த நட்பு என்றென்றும் நம்பிக்கையுடன் நடை போடும்..

எழுதியவர் : (29-Sep-15, 12:56 pm)
பார்வை : 239

மேலே