நரகத்துக்குப் போக வேண்டாம்
முல்லா கோபத்துடன் ஒரு பெரியவரைப் பார்த்து,''நீ நரகத்துக்குப் போ,''என்று கத்தினார்.அருகில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஏனெனில் அந்தப் பெரியவர் அவ்வளவு நல்லவர்.உடனே எல்லோருமொன்று கூடி முல்லா அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.முல்லாவும் வேறு வழியின்றி போகவே பெரியவரைப் பார்த்து சொன்னார்,''நீங்கள் நரகத்துக்குப் போக வேண்டாம்.''

