ஞாபகங்கள்

டிப் டீ
பொட்டலத்தை
சுடுபாலில் முக்கி எடுத்து
எறியும்போதேல்லாம்
எதிர்பாரா விருந்தாளி
வந்த வேளையில்
டப்பாவில் வைத்த சில்லறையை
அம்மா கிசுகிசுத்து எடுத்துத்தர
புழக்கடை கதவு வழியே
ஐந்து பைசா டீத்தூள்
வாங்கி வர அண்ணாச்சி கடைக்கு
ஓடிய ஞாபகம்...