உலக இதய தினம்
ஒருவேளை
உன்னோடு நான் இல்லாமல் போனால்
கவலைக் கொள்ளாதே கண்ணே..
இம்மொழி உதிர்த்த என்னிடம்
எத்தனை துடிப்போடு பதிலுரைத்தாய்
கவலைக் கொள்ளாமல் இருப்பதற்கு
"என் இதயம் மட்டும் கல்லா என்று"
எதற்கும் ஒருமுறை பரிசோதித்துக் கொள்
கல்லாகவாது இருக்கிறதா என்று
உலக இதய தினமாம் இன்று...