பக்தி பகல் வேஷம்

கோயிலுக்கு
போனா அமைதி கிடைக்கும்,
ஆசையோட போனா ?
என்ன கிடைக்கும்.?
வேண்டினவங்களுக்கெல்லாம்
வரம் தரணும்னா கோயில்,
ரேசனா, பேசனா?
சமரசம் உலாவும் இடமே
சன்னிதானம்
கட்டண தரிசனம்
இலவச தரிசனம்
சிறப்பு தரிசனம்,
இவையெல்லாம் தரிசனம் அல்ல
என்பதே நிதர்சனம்.