நமக்கு நிகழ்வு ,,,அவர்களுக்கு

உரிக்கப்பட்ட கோழியைப்போல
கவிழ்த்து போட்டிருந்தார்கள்
கழுத்து சரியாக அறுபடவில்லை
மிதமான துடிப்புடன் பிரிக்கப்பட்ட இதயம்
ஒட்ட மறுக்கும் உதட்டோரம் வழியும்
அடர்ந்த எச்சில் நூலின்வழியே
உயிர் வெளியேறிக்கொண்டிருந்தது
அந்த எச்சிலின் அடர்த்தியில்தான்
தொங்கிக்கொண்டிருந்தார்கள்,,,,
அவன் நேசத்திற்குறியவர்கள் ம்ம்ம்,,,
நூல் பிரியவேயில்லை
அவனை அப்புறப்படுத்தும்வரை,, ம்ம்ம்
அனுசரன்