அவமானச் சின்னம்

அட மூடனே !.....
உன் இச்சை தீர்க்க
வந்த எந்திரமோ - என்
அன்னை அவள்
விரித்த முந்தானையில்
நீ வீற்றிருக்க........

நாநயம் இழந்த
நய வஞ்சகனே - உன்
அகம் அறியா - அவள்
மோகம் செய்த பாவத்தால்
இதோ நான் விரித்த
தோணியில் நாணயங்கள்......

நான்
என்ன பாவம்
செய்தேன் கூறடா...
அவள் முந்தானை
செய்த பாவம் - நான்
முகவரி தேடும்
இந்நாட்டின்
அவமானச் சின்னம்.

- தஞ்சை குணா

எழுதியவர் : மு. குணசேகரன் (29-Sep-15, 11:55 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 86

மேலே