உதாசீனம்

உன்னை விட
யாரும்
தாழ்ந்தவனுமில்லை,
எவரையும்
விட நீ உயர்ந்து விட்டாலும்
அப்படியே நிலைத்து
நின்று நன்கு வளர
பணிந்து நட.
நிஜமான பவ்வியம் மட்டுமே
வாழ்வினில் பண்பு காக்கும்
இல்லையெனில்
உன் பார்வை உன் செய்கை
செய்யும் யாவும்
உதாசீனமாகும்.
இருந்து விட்டால்
திருஷ்டி தான்,
உனக்கும்
உன்னைசுற்றியும்.