உண்மையை ஊமையாக்காதே

உண்மையை ஊமையாக்காதே ..
உறவுகளை அதிகம் நம்பாதே ..
உணர்வுகள் இறந்தாலும்....
உயிர் இத்துப்போனாலும்....
உறுதியிழந்து வாழாதே....
உறுதி கொள் -நிச்சயம்....
உறுதியான வெற்றிஉண்டென்று....
உன் முகத்தை திருத்து....
உலகத்துக்கு நீ ஒரு கண்ணாடி....
உள்ளத்தில் கசப்பு ஏற்பட்டாலும்....
உதட்டில் உண்மைபேசு....
உலகம் இப்போ விலை உலகம்....
உலகமயத்தில் இது சாதாரணமப்பா ..
உன்னை நீ மதிப்பீடு செய்....
உண்மையில் கிடைக்கும் பெரு வெற்றி ....!!!