இன்பத்தோடும் வாழ்ந்திடவே

இதயத்தை இன்ப குளியலில்
நனைத்து நறுமணம் பூசியவளே..

இறுக பிடித்து இச் என்ற
முத்த மழையில் நனைத்தவளே...

இதயத்தில் நிரந்தர
குடி அமர்ந்தவளே...

இனபத்தை இமையமலைக்கே
இழுத்து சென்றவளே...

இன்பத்தின் எல்லையை
எனக்கு காட்டி கொடுத்தவளே...

இணைந்துவிடு என்னுடன் நீ
இனி வரும் காலத்திலும்..

இன்பத்தோடு வாழ்ந்திடவே
இனிமையாய் அழைக்கிறேன் உன்னை...

இனிமேலும் தாமதிக்காதே
இருப்பு கொள்ளவில்லை என்னால்...

இன்பம் மட்டுமே வாழ்க்கை என
இனிமேலும் வாழ்வோமடி...

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (30-Sep-15, 11:51 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 45

மேலே