எல்லாம் உன் கையில்

நீ சாதிக்க எண்ணும்போது பாதிக்க
நிறைய துன்பம் வரலாம்
பலரும் வெறுக்கலாம்
வசை பேசலாம்-ஆனால்
அவர்கள் தான் உன் வாழ்வில்
முக்கியமானவர்கள்
அவர்கள் உன்னை செதுக்குகிறார்கள்
மண்ணில் நிலைத்திட
மகத்துவம் புரிந்திட
துணிடந்து போராடு
ஒன்று புரிந்து கொள்
ஆழமான குழிகள் தான்
குளங்களாய் மாறும்-அது போல
உன் நம்பிக்கையின் ஆழம் தான்
உன்னை வெற்றியாளியாக்கும்
வாளில்லாத போராட்டமா?-உன்
விழியை ஈட்டியாக்கி
செயலைக் கேடயமாக்கி
நம்பிக்கையை கவசமாக்கி
நாணயத்தை கிரீடமாக்கிச் செல்
அங்கே உன் எதிரிகளாய்
வீற்றிருப்பது வேறு யாருமில்லை-உன்
பயமும் தயக்கமும் சோம்பலும் தான்
விட்டொழி முதலில் அதனை
சூடிவா வாகையை
சுற்றி வரும் பூமியும் உன் கையில் .!.

எழுதியவர் : rajasri (30-Sep-15, 4:01 pm)
சேர்த்தது : ராஜஸ்ரீ
Tanglish : ellam un kaiyil
பார்வை : 775

மேலே