ஏமாற்றம்
கடலும் ஓர்
அழகு என்றாய் - அதை
கடக்கத் தெரிந்தவனுக்கு....
நெருப்பும் ஓர்
அழகு என்றாய் - அதை
நெருங்கத் துணிந்தவனுக்கு....
கல்வியும் ஓர்
அழகு என்றாய் - அதை
கற்கத் தெரிந்தவனுக்கு......
வாழ்க்கையும் ஓர்
அழகு என்றாய் - அதில்
வாழத் தெரிந்தவனுக்கு ......
உலகமே ஓர்
அழகு என்றாய் - அதை
உணரத் தெரிந்தவனுக்கு.....
இவ்வனைத்தும் உணர்ந்தவள் - நீ
இறுதிவரை என்னை உணராமலே
பிரிந்துச் சென்றாய் ஏனோ - ஓர்
ஏமாற்றத்தைக் கொடுத்து !.......
- தஞ்சை குணா